search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநிலை உதவியாளர்கள் நியமனம்"

    பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணை வழங்கினார். #TNCM
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்காக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என இதுவரை 23 ஆயிரத்து 882 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதுதவிர, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 216 வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்தொடர்ச்சியாக, பொது சுகாதாரத்துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் கே.குழந்தைசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TNCM
    ×